×

வெளிமாநில வரத்தால் அய்யலூர் சந்தையில் தக்காளி விலை சரிவு

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டத்தில்  புகழ்பெற்ற அய்யலூர் தக்காளி மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி தினமும் விற்பனைக்கு வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு சில்லரையில் 1 கிலோ 20 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அய்யலூர் சந்தையில் நேற்று தக்காளி மொத்த விலை நாட்டு தக்காளி ஒரு பெட்டி (14 கிலோ) ரூ. 100 முதல் ரூ. 150க்கு விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி விலை சரிவு குறித்து விவசாயி நந்தகுமார் கூறியதாவது: அய்யலூர் சந்தைக்கு 15 முதல் 30 லாரிகளில் வந்து கொண்டிருந்த தக்காளி நேற்று வரத்து அதிகரித்து 40 லாரிகளில் விற்பனைக்கு வந்துள்ளது. வெளி மாநிலங்களில் தக்காளி விளைச்சல் அதிகம் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருவதால் தமிழகத்தில் விலை குறைந்து உள்ளது.

மார்கழி மாதம் தொடங்கியுள்ளதால் முகூர்த்தம் மற்றும் விஷேச நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை. இதனால் வழக்கத்தை விட தக்காளியின் தேவை குறைந்தே உள்ளது. தொடர் மழையினால் வரத்து குறைவாக காணப்படுகிறது. 100 கிலோ வரவேண்டிய இடத்தில் 30 முதல் 40  கிலோ தான் வருகிறது. வரத்து அதிகமாக இருந்த காலத்தில் 100 கிலோ விற்பனை விற்பனை செய்தால் என்ன லாபம் கிடைக்கிறதோ அது 30 கிலோ அளவிற்கு விற்றாலே 100 கிலோ விற்பதற்கு சமம் ஆகும்.

மேலும் விலை குறைந்து மினி வேன் மூலம் வியாபாரிகளுக்கு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக சென்றுவிடுவதால் கடந்த சில நாட்களாகவே அய்யலூர் சந்தையில் தக்காளி மொத்த விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 வெளி மாநிலத்தில் இருந்து தக்காளிகள் விற்பனைக்கு வருவதாலும் விலை குறைவாக இருப்பதாகவும், தக்காளி பறிப்பதற்கு கூலி கூட கட்டாததால் தக்காளியை அப்படியே செடியில் விட்டு விடுகிறோம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags : Ayyalur , Dindigul: Famous Ayyalur Tomato Market in Dindigul District Dindigul, Krishnagiri and Andhra Pradesh,
× RELATED திறந்தவெளி கிணற்றில் ஆட்டோ பாய்ந்து டிரைவர், பயணி பலி: வடமதுரை அருகே சோகம்