×

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம்!: ரஷ்ய மருத்துவர்களிடம் இந்திய மருத்துவர்களுக்‍கு பிரத்யேகப் பயிற்சி..!!


டெல்லி: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் அடுத்தகட்டமாக விண்வெளி மருத்துவத்தில் கைத்தேர்ந்த ரஷ்ய மருத்துவர்களிடம் மருத்துவர்களுக்‍கு பிரத்யேகப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. விண்வெளி மருத்துவம் என்பது விண்வெளி பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்கு அப்பயணத்தின் போதும், விண்வெளிக்கு சென்றடைந்த பின்னரும் உடலில், மனநிலையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கண்டறிந்து அவற்றை சீர் செய்யும் பணியாகும். இந்நிலையில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் அடுத்தகட்டமாக விண்வெளி மருத்துவத்தில் கைத்தேர்ந்த ரஷ்ய மருத்துவர்களிடம் இரு இந்திய மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்திய விமானப்படையை சேர்ந்த இரு மருத்துவர்களும் யூஏ காகரின் ஆய்வு மையத்தில் பயிற்சிபெறவுள்ளனர்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. அந்தவரிசையில் உலகிலேயே விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் 4-வது நாடாக இந்தியா விரைவில் இடம்பெற உள்ளது. அதற்காக ககன்யான் என்ற பெயரில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மிகப் பெரிய திட்டப் பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ககன்யான் விண்கலம் விண்வெளியில் பூமியை தாழ்வான நிலையில் இருந்து 7 நாட்கள் சுற்றிவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்துக்கு தேவையான கருவிகள், உதிரி பாகங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது.

Tags : doctors ,space ,Indian ,Russian , Space, Man, Kaganyan Project, Russian Physician, Indian Physician, Training
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...