×

பழநி பேக்கரிகளில் காலாவதி பிரட் பாக்கெட்டுகள் பறிமுதல்

பழநி : தினகரன் செய்தி எதிரொலியாக பழநி பேக்கரிகளில் விற்பனை செய்யப்பட்ட காலாவதியான பிரட் பாக்கெட்டுகள் உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.பழநி நகரில் ஏராளமான பேக்கரிகள் உள்ளன. இப்பேக்கரிகளில் பிரட், பிஸ்கட், கேக், இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றில் பல பேக்கரிகளில் தற்போது காலாவதி மற்றும் தயாரிப்பு தேதி போன்றவை தற்போது குறிப்பிடப்படுவதில்லை. படிப்பறிவில்லாத கிராம மக்கள், இதனை அறியாமல் வாங்கிச் சென்று சாப்பிடுகின்றனர். இவற்றில் பல காலாவதியான பொருட்கள் என புகார் கிளம்பின. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக பழநி புறநகர் பகுதிகளில் உணவுப்பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் தலைமையிலான அதிகாரிகள் பேக்கரி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காலாவதி தேதி குறிப்பிடாத 25க்கும் மேற்பட்ட பிரட் பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட பேக்கரி கடைகளுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டன. பாக்கெட்டுகளில் காலாவதி மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிட்டிருக்க வேண்டும். உணவுப்பொருட்களில் செயற்கை நிறங்கள் பயன்படுத்தக் கூடாது. வாடிக்கையாளர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டன.


Tags : bakeries ,Palani , Palani: Expired bread packets sold at Palani bakeries action taken because of Dinakaran news
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது