×

பாண்டியாற்றின் கரையோரம் தடுப்பு சுவர் இடிந்து சேதம் -சீரமைக்க கோரிக்கை

கூடலூர் :  கூடலூர் அடுத்துள்ள நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டு தேவாலா சோழ வயல் பகுதியில் பாண்டியாறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையில் உள்ள சாலையோர தடுப்பு சுவர் மழைக்காலத்தில் இடிந்து விழுந்தது. சோலவயல் புதுப்பாலம் பகுதியிலிருந்து சோழ வயல் வழியாக நகராட்சியின் 3வது வார்டு பில்லுகடை பகுதிக்கு இணைப்பு சாலை ஆகவும் இச்சாலை உள்ளது.

ஏற்கனவே இரண்டு முறை இப்பகுதியில் தடுப்பு சுவர் சரிந்து விழுந்த நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் கடந்த ஆண்டு பெய்த மழையில் தடுப்பு சுவர் இடிந்தது. இப்பகுதியில்  சாலையை ஒட்டி ஆறு வளைந்து செல்வதால், மழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, நீர் தடுப்பு சுவற்றில் மோதி, அரிப்பு ஏற்பட்டு அடிக்கடி தடுப்பு சுவர் இடிந்து விடுகிறது.

தடுப்பு சுவர் சீரமைக்கப்படா விட்டால் அடுத்து வரும் மழைக் காலத்தில் இந்த சாலை பகுதி சேதமாகி துண்டிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தடுப்பு சுவரை ஆழமான அடித்தளத்துடன் தரமாகவும், விரைவாகவும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pandiyar ,banks , Kudalur: The 4th Ward Devala Chola field under Nelliyalam Municipality near Kudalur goes to Pandiyaru.
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்