×

கொடைக்கானல் வந்த பயணிகள் உற்சாகம் மூடிய சுற்றுலாத்தலங்கள் திறப்பு

கொடைக்கானல் : கொடைக்கானலில், கனமழையால் மூடப்பட்டிருந்த வனத்துறை சுற்றுலாத்தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதமாக வீடுகளில் முடங்கிக் கிடந்த பொதுமக்கள் தற்போது ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுற்றுலா வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த சுற்றுலா இடங்கள் மூடப்பட்டன.இருப்பினும் விடுமுறையையொட்டி கடந்த 2 நாட்களாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். நகரில் மேகமூட்டத்துடன் இதமான சாரல் மழை பொழிகிறது.

இதமான சீதோஷ்ண நிலையை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து வருகின்றனர். பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், செட்டியார் பூங்கா ஆகிய பகுதிகளில் சுற்றியும், கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்தும் உற்சாகமடைகின்றனர். காற்றுடன் கூடிய கனமழையால் மூடப்பட்ட சுற்றுலா இடங்கள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. இதனால், சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக, அனைத்துப் பகுதிகளையும் சுற்றிவந்தனர்.

Tags : Tourist places ,Kodaikanal , Kodaikanal: In Kodaikanal, tourists have been reopened due to heavy rains.
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...