வால்பாறை மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது 8 பேர் உயிர் தப்பினர்

வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்து வாட்டர்பால்ஸ் பகுதியில் மூடுபனி காரணமாக நேற்று அதிகாலை கார் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் காரில் பயணித்த 8பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.பொள்ளாச்சியில் இருந்து அதிகாலை புறப்பட்ட கார் உருளிக்கல் எஸ்டேட்டை சேர்ந்த 8 பேருடன் வால்பாறை நோக்கி கார் சென்று கொண்டிருந்தது.

வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் நிலவிய மூடுபனி காரணமாக சாலை தெரியாமல், பக்கவாட்டு பகுதியில் கார் நிலை தடுமாறி உருண்டது. கார் டிரைவர் முருகதாஸ் (40), மற்றும் அவருடன் பயணித்த 7 பேர் சிறு காயங்களுடன் தப்பினர்.

ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் பொள்ளாச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மற்றவர்கள் வால்பாறை அரசு மருத்துவமனைகள் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.  விபத்து குறித்து காடம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>