இடியும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி-திருச்சுழி அருகே கிராமமக்கள் பீதி

திருச்சுழி : திருச்சுழி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டியை அகற்ற வே்ண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்சுழி அருகே உள்ள கல்லுமடத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் உள்ள மடத்தின் அருகே உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மிகவும் மோசமான நிலையை எட்டியது. இதனால் குடிநீர் ஏற்றப்படாமல் புதிய மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு பல வருடங்களாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் பழைய குடிநீர் தொட்டி காட்சிபொருளாக உள்ளநிலையில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இக்குடிநீர் தொட்டியின் அருகில் கோயில் திருவிழாக்கள், குழந்தைகள் விளையாடும் மைதானம், பெரியவர்கள் ஓய்வு எடுக்கும் மடம் உள்ளது.

 இதனால் பலரின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளதாக கிராமத்தினர் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் ெதரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புலம்புகின்றனர். எனவே, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், ``எங்கள் கிராமத்தில் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலைத்தொட்டி தற்போது பயன்பாட்டில்லாமல் உள்ளது. இத்தொட்டி முற்றிலும் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. தற்போது மழைக்காலம் என்பதால் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். எனவே, இத்தொட்டியை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்’’ என்று கூறினர்.

Related Stories:

>