×

சர்வதேச தமிழ் சமூகத்தின் எதிர்ப்புக்கு பணிந்தது இலங்கை அரசு: யாழ் பல்கலை வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்திற்கு மீண்டும் அடிக்கல்

கொழும்பு : சர்வதேச தமிழ் சமூகத்தினர் மற்றும் மாணவர்களின் கடும் எதிர்ப்பினை அடுத்து இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து இடித்து அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் மீண்டும் அமைக்கப்படுகிறது.இலங்கையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலைகளின் நினைவாக 2019ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த இந்த நினைவுச் சின்னம், இலங்கை அரசின் உத்தரவுப்படி சில நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது.

மகிந்த ராஜபக்ஷே அரசின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் சமூகத்தினர் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை மீண்டும் ஏற்படுத்த வலியுறுத்த யாழ்ப்பல்கலைக்கழக மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கடைப்பிடித்து வந்தனர். இந்த நிலையில் தமிழ் அமைப்பினர் மற்றும் மாணவர்களின் கடும் எதிர்ப்பிற்கு இலங்கை அரசு பணிந்துள்ளது. இடிக்கப்பட்ட அதே இடத்தில், முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணை வேந்தர் சற்குண ராஜன் உறுதி அளித்துள்ளார். நினைவுச் சின்னம் அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து 2 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மாணவர்கள், துணை வேந்தர் சற்குண ராஜன் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைத் திரும்பப் பெற்றனர்.


Tags : Government ,Sri Lanka ,protest ,memorial ,Tamil ,campus ,Jaffna University ,Mullivaikkal , Government of Sri Lanka: University of Jaffna, Mullivaikkal, Monument
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...