×

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.06 கோடியாக உயர்வு: பலி எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது..!

நியூயார்க்: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக  நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 1 வருடம் ஆகிவிட்டது. இதன் வீரியம்  தற்போது தான் குறைந்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு  அடைந்தோர் எண்ணிக்கை 9.06 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6 கோடியை 48 லட்சத்து 10 ஆயிரத்து 969 பேர்  குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19 லட்சத்து 43 ஆயிரத்து 090 பேர்  உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 கோடியை 39 லட்சத்து 33 ஆயிரத்து 928 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1 லட்சத்து 08 ஆயிரத்து 531 பேர்  கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள்:

அமெரிக்கா  -      22,917,334
இந்தியா        -  10,467,431
பிரேசில்        -  8,105,790
ரஷ்யா          -  3,401,954
பிரிட்டன்        - 3,072,349

பிரான்ஸ்        -  2,783,256
துருக்கி       -  2,326,256
இத்தாலி       - 2,276,491
ஸ்பெயின்    - 2,050,360
ஜெர்மனி     - 1,929,353

கொரோனா உயிரிழப்பு அதிமுள்ள நாடுகள்:

அமெரிக்கா - 383,275
பிரேசில்    -  203,140   
இந்தியா - 151,198
பிரிட்டன்    - 81,431
இத்தாலி -  78,755.
பிரான்ஸ்   -  67,750

கொரோனாவில் இருந்து அதிகம் குணமடைந்த நாடுகள்:

அமெரிக்கா - 13,483,490
இந்தியா - 10,092,130
பிரேசில்    -  7,167,651
ரஷ்யா          -  2,778,889
துருக்கி       -  2,198,150

Tags : corona victims , World, Corona
× RELATED 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு: நேற்று ஒரே நாளில் 19,182 பேர் குணமடைந்தனர்