முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25% இட ஒதுக்கீடு வேண்டும்: கருணாஸ்

திருப்பூர்: திருப்பூரில் நேற்று முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சி நிறுவன தலைவரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் அளித்த பேட்டி:  அதிமுக என்பது முக்குலத்தோர் சமுதாய கட்சி என்ற அளவிற்கு இருந்து வருகிறது. வன்னியர் சமூகம் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு வருகிறது. இதுபோல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சசிகலா விடுதலையாகி வருவதை எங்கள் சமுதாயம் மற்றும் அதிமுகவில் இருக்க கூடிய உண்மையான விசுவாசிகள் வரவேற்பார்கள். அவர் வருகையால் கட்சியில் பிரச்னைகள் ஏற்படுமா? என்ற யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. ஒருவேளை சசிகலா அந்த கட்சிக்கு உழைத்தது உண்மையென்றால், நிச்சயமாக அவர்களை பிடித்தவர்கள் அவர்களுக்கு ஆதரவை கொடுப்பார்கள் என்று அவர் கூறினார்.

Related Stories:

>