×

தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணில் அழைக்கலாம்; ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்: கொரோனா தடுப்பூசி குறித்து மக்கள் பயப்பட வேண்டாம்; கார்த்திகேயன், அறுவை சிகிச்சை நிபுணர், அரசு சாரா சேவை மருத்துவர்கள் சங்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தொடர்பான பணிகளை மேற்கொள்ள நான்கு மட்டத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் தலைமையில் மாநில வழிகாட்டுதல் குழு, சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் மாநில பணி குழு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட பணிக்குழு, வட்டார அளவில் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றுள்ளது. முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் 17 இடங்களில் ஒத்திகை நடைபெற்றது. 2வது கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் 266 இடங்களில் முழு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையில் தடுப்பூசி மத்திய மருத்துவ சேமிப்பு கிடங்கு, மாநில கிடங்கு, மாவட்ட கிடங்கில் இருந்து தடுப்பூசி மையங்களுக்கு எவ்வாறு அனுப்பி வைக்கப்படும், தடுப்பூசி மையங்களின் வடிவமைப்பு, காத்திருக்கும் அறை, தடுப்பூசி போடும் அறை, கண்காணிப்பு அறை மட்டும் வந்து செல்வதற்கு தனி வழி, தனி மனித இடைவெளி பின்பற்றுவதற்கான வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளதா  என்பது தொடர்பாக ஒத்திகை பார்க்கப்பட்டது.

 ஒவ்வொரு மையத்திலும் 5 தடுப்பூசி அலுவலர்கள் பணியாற்றுவார்கள். பட்டியலை சரிபார்க்க முதல் அலுவலர்,  அதை கணினி மற்றும் கோவின் இணையதளத்தில் உள்ள தகவல்களை சரிபார்த்து ஒப்புதல் அளிக்க 2வது அலுவலர், தடுப்பூசி போடும் அறையில் 3வது அலுவலர், கண்காணிப்பு அறையில் 4வது அலுவலர், இவற்றை கண்காணிக்க  5வது அலுவலர் என்று மொத்தம் 5 பேர் நேரடியாக பணியாளர்கள் இருப்பார்கள். தடுப்பூசி செலுத்தி விட்டு கண்காணிப்பு அறையில் உள்ளவர்களை கண்காணிக்க ஒரு மருத்துவர் மற்றும் அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் இருக்கும். தடுப்பூசி செலுத்தப்பட்டபிறகு இது தொடர்பான குறுஞ்செய்தி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 14ம் தேதி முதல் தடுப்பூசி அளிக்கும் பணி துவங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசை பொறுத்த வரையில் தென் மாநிலங்களுக்கு வழங்கும் மத்திய அரசின் கிடங்கை தவிர மாநில அளவிலான சேமிப்பு கிடங்கு, 10 மண்டல அளவிலான சேமிப்பு கிடங்கு, மாவட்ட அளவிலான சேமிப்பு கிடங்கு, குளிர்சாதன வசதி கொண்ட நடமாடும் ேசமிப்பு கிடங்குகள் தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே தடுப்பூசி திட்டம் பாதிக்கப்படாத வண்ணம் மருத்துவ சேவை கழகம் கூடுதலாக 50 கிடங்கை அமைத்துள்ளது. முதல் கட்டமாக தடுப்பூசி போடும் இடங்களுக்கு தேவையான குளிர்சாதன பெட்டிகள் தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. இது அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து சுகாதார பணியாளர்களுக்கு முதல் கட்டமாகவும், 2வது கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும் வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு 104 என்ற தொடர்பு எண்ணையும், பொது சுகாதார இயக்குனரகத்தையும் அணுகலாம். தடுப்பூசி செலுத்தி விட்டு கண்காணிப்பு  அறையில் உள்ளவர்களை கண்காணிக்க ஒரு மருத்துவர் மற்றும் அனைத்து  மருந்துகளும் தயார் நிலையில் இருக்கும்.  தடுப்பூசி செலுத்தப்பட்டபிறகு இது  தொடர்பான குறுஞ்செய்தி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்தியாவில் தற்போது பாரத் பயோடெக் கோவாக்சின் என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் உருவாக்கிய மருந்து இறந்து போன கொரோனா வைரசை வைத்து உருவாக்கப்பட்டது. இது கடைசி கட்ட பரிசோதனையில் உள்ளது. இதையடுத்து, 2வதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தின் மருந்து உள்ளது. பிரிட்டனில் உள்ள மருந்து கம்பெனியிடம் மருந்தை வாங்கி அவற்றை உற்பத்தி செய்வது தான் இதன் பணி ஆகும். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா என்ற இரண்டும் சேர்ந்து உற்பத்தி செய்தது தான் கோவிஷீல்டு தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பூசியை தான் கொள்முதல் செய்து அனைவருக்கும் இந்திய அரசு போட உள்ளது.

ஜனவரி 13 முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது. தற்போதைக்கு கோவிஷீல்டு மட்டுமே போடப்பட உள்ளது. அடினோ வைரஸ் என்று சொல்லப்படுகிற வைரசில் இருந்து உற்பத்தி செய்ததே இந்த தடுப்பூசி. இந்த தடுப்பூசியின் குணப்படுத்தும் தன்மை 90 சதவீதம் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்த தடுப்பூசியை நாம் போட்டாலுமே அதை 2 வார இடைவெளியில் போட வேண்டும். கோவிஷீல்டை 6 வார இடைவெளியில் நாம் போட வேண்டும். மகாராஷ்டிராவில் தான் மருந்து இருப்பு வைக்கும் மையம் உள்ளது.

இதேபோல், வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் 3 கோடி பேருக்காவது இந்த தடுப்பூசியை போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முன்களப்பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்டு பின்னர் ஜூலை மாதத்திற்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளுமே 100 சதவீதம் பக்கவிளைவுகள் ஏதும் இல்லை என நிரூபிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். முதலில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் தான் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வார்கள். எனவே, யாரும் பயப்பட வேண்டாம். கொரோனாவிற்கு தற்போது தான் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் ஒருவிதமான பீதி இருக்கும். ஆனால், பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. தடுப்பூசி போடுவதன் மூலம் 90 சதவீதம் பேருக்கு கொரோனா பரவுவதை தடுத்துவிட முடியும்.

குறிப்பாக, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை, நுரையீரல் மாற்றும் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் மட்டுமே மருத்துவர்களின் ஆலோசனையை பெற்ற பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதேபோல், பொதுமக்கள் போலியான தடுப்பூசிகளை தவிர்க்க அரசின் ‘கோவின்’ செல்போன் செயலியை பயன்படுத்தி மருந்து குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். தடுப்பூசி போட்ட பிறகு டிஜிட்டல் முறையில் நமக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுவிடும். அதை வைத்து தான் நாம் இனி வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்ல முடியும். மேலும், இதுபோன்ற நேரங்களில் அரசு மருத்துவமனைகளிலும், தரச்சான்று பெற்ற தனியார் மருத்துவமனைகளிலும் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தரச்சான்று பெறாத மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம். இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு தேவை.

கொரோனாவிற்கு தற்போது தான் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் ஒருவிதமான பீதி  இருக்கும். ஆனால், பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. தடுப்பூசி போடுவதன் மூலம்  90 சதவீதம் பேருக்கு கொரோனா பரவுவதை தடுத்துவிட முடியும்.

Tags : J. Radhakrishnan ,Surgeon ,NGO Service Physicians Association ,Karthikeyan , For doubts about the vaccine Call 104; J. Radhakrishnan, Health Secretary: People should not be afraid of the corona vaccine; Karthikeyan, Surgeon, NGO Service Physicians Association
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...