புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம்

வாலாஜாபாத்: புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகாமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி டில்லியில், விவசாயிகள் போராடி வரும் நிலையில். அவர்களுக்கு, ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சிகள் சார்பில் நேற்றுமுன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் லாரன்ஸ் தலைமை தாங்கி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். ஆர்ப்பாட்டத்தின்போது, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், இந்த வேளாண் சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் விளக்கிப் பேசினர்.

மேலும், திமுக சார்பில் கிளை செயலாளர் வினோபாஜி, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கமலநாதன், காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் சுகுமார், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராசு, மாவட்ட துணை செயலாளர் உதயசூரியன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் வளவன், வாலாஜாபாத் நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய நிர்வாகி முரளி, மதிமுகவின் தெற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், வாலாஜாபாத் நகர செயலாளர் சிவக்குமார், அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு போராட்டக்குழு மாவட்ட செயலாளர் நேரு உட்பட அனைத்து கட்சிகளையும் சார்ந்த  மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

Related Stories:

>