ஆவடி ராணுவ தொழிற்சாலையில் தயாரித்த விமான, கப்பல் உதிரிபாகம் ராணுவத்திடம் ஒப்படைப்பு

சென்னை: சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு தேவையான கியர்கள் மற்றும் நீர்முழ்கி கப்பல்களுக்கு தேவையான பில்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை விமானப்படைக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஆவடி தொழிற்சாலையில் நடைபெற்றது. இந்த இரண்டு தளவாடங்களை ஆவடி தொழிற்சாலை இயக்குனர் பாலமுருகன், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் சதீஷ் ரெட்டி முன்னிலையில் பெங்களூரு ஏரோநாட்டிகல் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் ஜெனரல் பிரவீன் குமார் மேத்தாவிடம் வழங்கினார். இதில் வட சென்னை எம்பி் கலாநிதி வீராசாமி  கலந்து கொண்டார். ஆவடி ராணுவ தொழிற்சாலையில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன இயக்குனர் சதீஷ் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories:

>