×

தமிழகத்தில் மேலும் 724 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: தமிழகத்தில் புதிதாக 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 64,080 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் 8,26,261 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 857 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது வரை 8,06,875 பேர் குணமடைந்துள்ளனர். 7,164 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் 4 பேரும் தனியார் மருத்துமனையில் 3 பேரும் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,222 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,Tamil Nadu , Another 724 people in Tamil Nadu are infected with corona
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...