பொதுப்பணித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் கட்டுமான பொருட்கள் எவை? இணையதளத்தில் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமான பிரிவு மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.1000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்த நிறுவனம் மூலம் பணிகளை செய்கிறது. இவ்வாறு டெண்டர் எடுக்கும் அந்த நிறுவனங்கள் கட்டுமான பணிகளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் சான்று வழங்கப்பட்ட சிமெண்ட், கம்பி, டைல்ஸ், ஜல்லி, எம்சாண்ட், எலெக்ட்ரிக் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தான் வாங்க வேண்டும் என்று ஒப்பந்த நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்குகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் www.tnpwd.com என்ற இணையதளத்தில் பொதுப்பணித்துறைஅங்கீகரிக்கப்பட்ட கட்டுமான பொருட்களின் விவரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories:

>