ஆட்சியாளர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது: காங். பொறுப்பாளர் குண்டுராவ் பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியாளர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளினால் அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் முடிவு செய்து விட்டனர். பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் 15ம் தேதி போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டம் 18ம் தேதி நடைபெறும். இந்த மாத இறுதியில் ராகுல்காந்தி தமிழகத்தில் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதன்பிறகு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார் என்றார். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உடனிருந்தார். இதைத்தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மகளிர் அணி நிர்வாகிகள் பட்டியலை மாநில மகளிர் அணி தலைவி சுதா முன்னிலையில் கே.எஸ்.அழகிரி வெளியிட்டார். மேலும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு கூட்டம் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்றது.

Related Stories:

>