×

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை காப்பாற்ற அதிமுக அரசு தீவிரம்: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் அ.தி.மு.க.வை சேர்ந்த மேலும் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோவை தெற்கு  மாவட்ட தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நேற்று காலை கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியதாவது: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் மேலும் துரிதப்படுத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கட்டமாக நடக்கும் ஆர்ப்பாட்டத்தை தடுக்க ஆளும் கட்சி முயற்சி செய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமை இந்த ஆட்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த பாலியல் வழக்கில் தொடர்புடைய அதிமுகவினர் பலரை காப்பாற்ற அரசு நினைக்கிறது. உண்மை குற்றவாளிகளை விரைந்து சிபிஐ கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் தமிழகத்தில் இன்னும் பல பெண்கள் பாதிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அதற்காக வழிவகுத்துக் கொண்டிருக்கிறார். பெண்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை தனது கட்சிக்காரர்களே முக்கியம் என்று அவர்களை அ.தி.மு.க. அரசு காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் வரை தி.மு.க. ஒரு போதும் ஓயாது. விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது பாலியல் சம்பவங்களில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் நீதிமன்றம் முன் நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு கனிமொழி எம்.பி பேசினார்.

* காரை தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து மறியல்
பொள்ளாச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க கோவையில் இருந்து சென்ற கனிமொழி எம்.பியின் காரை ஈச்சனாரியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். சாலையில் தடுப்புகளை வைத்து தடுத்ததால், போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கனிமொழி தலைமையில் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரைமணி நேரம் கழித்து தி.மு.க.வினர் அங்கிருந்து பொள்ளாச்சி புறப்பட்டனர்.


Tags : AIADMK ,Pollachi , AIADMK to save key culprits in Pollachi sex case: Kanimozhi MP Indictment
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...