ஓடை பாலத்தில் மோதி கார் கவிழ்ந்து தீப்பற்றியதில் சென்னையை சேர்ந்த 3 பேர் பலி

திட்டக்குடி: தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், முத்துக்குமார். நண்பர்களான இருவரும் சென்னை அம்பத்தூரில் தொழில் நிறுவனம் நடத்தி வருகின்றனர். தேனிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு, நேற்று மதியம் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், ஓடை பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியனின் தாய் முத்துலட்சுமி (70) அங்கேயே பலியானார். கார் எரிந்ததில் சுப்பிரமணியன் (46) உடல் கருகி பலியானார்.அவ்வழியாக சென்றவர்கள் முத்துக்குமார் (36), அவரது மனைவி செல்வராணி (27), மகன் ஸ்ரீசாய் ஆத்வித் (5) ஆகியோரை மீட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் செல்வராணியும் (27) உயிரிழந்தார். மற்றவர் கள் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

>