×

வைகோ தலைமையில் ஆலோசனை கூட்டம் ம.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியது என்ன?

சென்னை:மதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் உயர்நிலைக் குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், அமைப்பு செயலாளர் ஆ.வந்தியதேவன், அரசியல் ஆய்வு மய்ய செயலாளர் செந்திலின், தேர்தல் பணி செயலாளர் ஆவடி அந்திரிதாஸ், இளைஞர் அணி செயலாளர் வே.ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Tags : MDMK , Waiko-led consultative meeting What should be included in the MDMK election manifesto?
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி