எழும்பூர்-மதுரை தேஜஸ் ரயில் மீண்டும் இயக்கம்

சென்னை: சென்னை - மதுரை இடையே, வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்பட்ட தேஜஸ் ரயில், கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தளர்வுக்கு பின்னர் அக்டோபர் 2ம் தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்பட்டது. எனினும், இந்த ரயிலில் பயணியர் வருகை குறைந்ததால் இருவழியிலும் ஜனவரி 4ம் தேதி முதல் ரத்து செய்யப்பபடும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேஜஸ் ரயில் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. எழும்பூர்- மதுரை இடையே தேஜஸ் ரயில் (02613) காலை 6 மணிக்கு புறப்படும். அதேபோல மதுரையில் இருந்தும் புறப்படும்.

Related Stories: