×

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை. பிடெக், டிப்ளமோ பட்டங்கள் செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: டெல்லி இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில் பி.டெக், டிப்ளமோ படிப்பு சேர்க்கப்பட்டன. ஆனால், இதை ஏற்காத பல்கலை மானியக்குழு, தொழில்நுட்பக் கல்விகளை தொலை தூரக் கல்வியாக வழங்குவது விதிமீறல் என்று கூறியது. இதனால், 2012க்குப் பிறகு இந்த படிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், ஏற்கனவே இதை படித்த மாணவர்களின் நிலை கேள்விக்குறியானது. இது தொடர்பாக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியாக, இது தொடர்பான வழக்கில் 2018ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘2009-2010 கல்வியாண்டு பி.டெக், டிப்ளமோ இன்ஜினியரிங் பட்டப் படிப்புகள் அங்கீகரிக்கப்படும்’ என்று தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, ‘2011-2012ம் ஆண்டில் பி.டெக், டிப்ளமோ இன்ஜினியரிங் படித்தவர்களையும் அங்கீகரிக்க வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் குழு எதிர்ப்பு தெரிவிக்காததால், 2011-12 கல்வியாண்டு பிடெக், டிப்ளமோ படிப்புகளும் அங்கீகரிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags : Indira Gandhi Open University ,BTech , Indira Gandhi Open University. Going to BTech, Diploma Degrees: Supreme Court Judgment
× RELATED நேரு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா