ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவன் மாயம்

தண்டையார்பேட்டை: ராயபுரம் ஜி.எம்.பேட்டையை சேர்ந்த ஹிராலால் மகன் சந்தோஷ்குமார் (15), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் காசிமேடு ஜீரோ கேட் அருகே கடலில் குளித்துள்ளார். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி சந்தோஷ்குமார் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார்.

அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மீனவர்கள் உதவியுடன் படகு மூலம் மாணவன் சந்தோஷ்குமாரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>