கடைகளில் தீவிபத்து

வேளச்சேரி: தூத்துக்குடியை சேர்ந்த சக்திவேல் (46), மேடவாக்கம் மாம்பாக்கம் பிரதான சாலையில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். அருகில், இவரது அண்ணன் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு இந்த கடைகளில் தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது.

தகவலறிந்து மேடவாக்கம், தாம்பரம், வேளச்சேரி மற்றும் துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து விரைந்து வந்த வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பைப்புகள், கம்பி வலைகள், பெயின்ட், வயர்கள், மின்விசிறிகள், இன்வெர்ட்டர் உள்பட பொருட்கள் எரிந்து நாசமானது.

Related Stories:

>