×

மாநகராட்சி சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக நிபுணர்கள் குழு

சென்னை: மாநகராட்சி சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக பரிந்துரைகளை அளிக்க நிபுணர்கள் அடங்கிய மேம்படுத்துதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிகின்றன. இந்த சுகாதார நிலையங்களில் பல்வேறு சிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒருசில உயர் சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. இதுதவிர 100 படுக்கை வசதிகளுடன் கூடிய 24 மணி நேரமும் செயல்படும் நகர்ப்புற சமூக நல மையங்கள் மற்றும் 5 பிரசவ மற்றும் அவசர கால சமுதாய நல மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மேலும் புதிய இடங்களில் மருத்துவமனைகளை உருவாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பரிந்துரைகளை அளிக்க நிபுணர்கள் அடங்கிய மேம்படுத்துதல் குழு ஒன்றை மாநகராட்சி அமைத்துள்ளது. இதில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இணை ஆணையர் திவ்யதர்ஷினி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் ேஹமலதா, கூடுதல் நல மற்றும் மருத்துவர்கள் அலுவலர்கள், முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தை சாமி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவின் முதல் ஆலோசனை குழு கூட்டம் கடந்த 7ம் தேதி நடைபெற்றது. இதில் மாநகராட்சி சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் ராஜிவ்காந்தி, ஸ்டான்லி, கீழ்பாக்கம், ஓந்தூரார் ஆகிய 4 அரசு மருத்துவமனைகளும் நகரின் மையப்பகுதியில் தான் உள்ளன. இவற்றை சுற்றி சென்னை மாநகராட்சியின் மருத்துவமனைகள் உள்ளன. எனவே, பொதுமக்கள் அனைவரும் அரசு பொது மருத்துவமனைகளுக்கு தான் சிகிச்சை பெற செல்கின்றனர்.

மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு குறைந்த அளவிலான பொதுமக்கள் மட்டுமே வருகின்றனர். நீண்ட தொலைவில் உள்ளவர்கள் கூட அரசு மருத்துவமனைகளுக்கு தான் செல்கின்றனர். எனவே சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் சிசிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான பணிகளை மேற்கொள்ள இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை அடிப்படையாக கொண்டு மாநகராட்சி மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டிய திட்டங்கள் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Panel ,experts ,corporation health centers , Committee of Experts to increase the number of patients receiving treatment in the Corporation Health Centers
× RELATED 25 தனியார் துறை நிபுணர்களுக்கு ஒன்றிய அரசு பணி