×

சித்தேரிக்கரை சரிந்ததால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது

ஆலந்தூர்: புழுதிவாக்கம் சித்தேரியின் கரைப்பகுதி சரிந்ததால் தண்ணீர் வெளியேறி, சுற்றுப்பகுதி வீடுகளில் புகுந்தது. சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட புழுதிவாக்கத்தில் 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட சித்தேரி உள்ளது.  பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, சமீபத்தில் சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ1.5 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது.

இந்நிலையில், ஏரிக்கரையின் ஒருபகுதி நேற்று திடீரென சரிந்ததால், தண்ணீர் வெளியேறி ஏரிக்கரையை ஒட்டியுள்ள புழுதிவாக்கம், செங்கேணி அம்மன் கோயில் தெரு, ராவணன் நகர் போன்ற பகுதி குடியிருப்புகள், கோயில்கள், பள்ளிக்கூடம், பூங்கா போன்றவற்றில் புகுந்தது. இதனால், மக்கள் செய்வதறியாது தவித்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என கூறப்படுகிறது.

Tags : houses ,collapse ,Chittorgarh , The houses were flooded due to the collapse of the Chittorgarh
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...