ஜெய்ஷ் தலைவன் மசூத் அசாரை 18க்குள் கைது செய்ய உத்தரவு

லாகூர்: பாகிஸ்தானில் செயல்படும், ‘ஜெய்ஷ் இ முகமது’ என்ற தீவிரவாத அமைப்பு மிக பயங்கரமானது. ஜம்மு காஷ்மீர் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். புல்வாமாவில் கடந்தாண்டு பிப்ரவரியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தி 40 பேரை கொன்றது இந்த அமைப்பு தீவிரவாதிகள்தான். இந்நிலையில், பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்யும் குற்றச்சாட்டில் இதன் தலைவன் மசூத் அசார் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் வரும் 18ம் தேதிக்குள் அவனை கைது செய்து ஆஜர்படுத்தும்படி பஞ்சாப் மாகாண தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதுபோன்ற வழக்கில்தான், மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் லக்விக்கு நேற்று முன்தினம் பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

Related Stories:

>