×

சையத் முஷ்டாக் அலி டிராபி: டி20 தொடர் இன்று தொடக்கம்

சென்னை: சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடர், நாட்டின்  முக்கிய நகரங்களில் இன்று தொடங்குகிறது. உள்நாட்டில் 2009 முதல் நடைபெற்று வரும் இந்த முக்கிய தொடர், கடந்த ஆண்டு கொரோனா பிரச்னையால் தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் தொடரும் நிலையில் பூட்டிய அரங்கில், ரசிகர்கள் இல்லாமல் இன்று தொடங்குகிறது. இதில்  நடப்பு சாம்பியன் கர்நாடகா, 2வது இடம் பிடித்த தமிழ்நாடு, புதுச்சேரி, மும்பை உட்பட 38 அணிகள் களமிறங்குகின்றன. எலைட் ஏ, பி, சி, டி, ஈ என 5பிரிவுகளில் தலா 6 அணிகளும், பிளேட் பிரிவில் 8 அணிகளும் இடம் பெற்றுள்ளன.

எலைட் ஏ பிரிவில் உள்ள அணிகள் மோதும் போட்டிகள் ஆளூர் (கர்நாடகா), எலைட் பி பிரிவு போட்டிகள் கொல்கத்தா (மேற்கு வங்கம்), எலைட் சி பிரிவு  போட்டிகள் வதோதரா (குஜராத்)  எலைட் டி பிரிவு போட்டிகள் இந்தூர் (மத்திய பிரதேசம்), எலைட் ஈ பிரிவு போட்டிகள் மும்பை (மகாராஷ்டிரா) மற்றும்  பிளேட் பிரிவு போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன. லீக் சுற்று ஜன.19 வரை நடைபெறும். தொடர்ந்து காலிறுதி ஜன.26, 27 தேதிகளிலும், அரையிறுதி ஜன.29, இறுதிப்போட்டி ஜன.31ல் நடக்கும். நாக் அவுட் சுற்று போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் நடக்க உள்ளன. சென்னையில் நாளை: பிளேட் பிரிவில் உள்ள 8 அணிகள் மோதும் லீக் போட்டிகள் அனைத்தும் சென்னையில் நடைபெறும்.  

குருநானக் கல்லூரி (வேளச்சேரி),  முருகப்பா டிஐ சைக்கிள்ஸ் (ஆவடி), ராமசந்திரா மருத்துவக் கல்லூரி (போரூர்), எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி (காலவாக்கம்) மைதானங்களில் நடைபெறும். சென்னையில் போட்டிகள் ஜன.11, 13, 15, 17, 19 தேதிகளில் நடக்கும் (தொடக்கம்: பகல் 12.00). சாதிப்பாரா தினேஷ்: தமிழக அணி கடந்த முறை இறுதிப் போட்டியில் கர்நாடகாவிடம் ஒரு ரன்னில் தோற்று 2வது இடம் பிடித்தது. லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட தமிழ்நாடு தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த தொடரில் விளையாடிய ஆர்.அஷ்வின், டி.நடராஜன் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதால் அணியில் இடம் பெறவில்லை.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான அணி இம்முறை கோப்பையை கைப்பற்றி அசத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக அணி: தினேஷ் கார்த்திக் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), விஜய் ஷங்கர் (துணை கேப்டன்), அருண் கார்த்திக், முருகன் அஷ்வின், பாபா அபராஜி–்த், பாபா இந்திரஜித், ஜி.பெரியசாமி, மணிமாறன் சித்தார்த், என்.ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), அஷ்வின் கிறிஸ்ட், எம்.முகமது, ஹரி நிஷாந்த், ஜெகதீசன் கவுசிக், ஷாருக்கான், ஆர்.சாய் கிஷோர், பிரதோஷ் ரஞ்சன் பால், லக்ஸ்மேஷா சூர்யபிரகாஷ், ஜெகநாத் னிவாஸ், சந்தீப் வாரியர், சோனு யாதவ். 


Tags : Syed Mushtaq Ali Trophy , Syed Mushtaq Ali Trophy: T20 series starts today
× RELATED பெங்கால் அணியிடம் வீழ்ந்தது தமிழகம்