சுப்மான் கில் இந்திய அணியின் மதிப்பு மிக்க வீரர்: கவாஸ்கர் பாராட்டு

சிட்னி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 3வது டெஸ்ட் சிட்னியில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் முதல் இன்னிங்சில், தொடக்க வீரர் சுப்மான் கில் அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டிற்கு ரோகித்சர்மாவுடன் இணைந்து 70 ரன் எடுத்து சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தார். தனது 2வது டெஸ்ட்டிலேயே பலமான ஆஸி.க்கு எதிராக அரைசதம் அடித்த கில்லை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டிள்ளார். இந்திய அணியின் மதிப்புமிக்க வீரர் சுப்மான்கில், அவர் அடித்து ஆடுவதைவிட தடுத்து ஆடுவதில் மிகவும் சிறப்பானவராக காணப்படுகிறார். நம்பிக்கையுடன் ஆடிய கில் சுப்மன் கில் அரைசதம் அடித்த நிலையில், அவர் அதை சதமாக மாற்றி காட்டுவார் என்று தான் எதிர்பார்த்தேன்.

அவர் அடித்து ஆடிய ஷாட்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய வகையில் அமைந்திருந்தது. கில்லிற்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என தெரிவித்துள்ளார். சீண்டிய லபுஸ்சேன் சுப்மான் கில் பேட்டிங் செய்துகொண்டு இருந்தபோது அவரிடம் மார்னஸ் லபுஸ்சேன் விதவிதமான கேள்வி கேட்டு கிண்டல் செய்துகொண்டு இருந்தார். உங்களுக்கு பிடித்த வீரர் யார் என்று மார்னஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு நான் பிறகு பதில் சொல்கிறேன் என்று கில் பதில் அளித்தார். ஆனால் சுப்மான் கில்லை விடாமல் வம்பிழுத்த அவர் உங்களுக்கு சச்சின்தானே பிடிக்கும். இல்லை விராட் பிடிக்குமா என்று கேள்வி எழுப்பினார். ஆனால் இதற்கு கில் பதில் எதுவும் அளிக்காமல் அமைதியாக ஆட்டம் மீது கவனம் செலுத்தினார்.

Related Stories:

>