சட்டமன்ற தேர்தலில் போட்டி?: குஷ்பு பேட்டி

மதுரை: ‘‘நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும்’’ என்று மதுரையில்  குஷ்பு தெரிவித்துள்ளார்.மதுரை தெப்பக்குளம் பகுதியில் பாரதிய ஜனதா சார்பில் இன்று பொங்கல் விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற பாஜ  செய்தி தொடர்பாளர் குஷ்பு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும். கமல் அறிவித்த பெண்களுக்கான அறிவிப்பை நான் வரவேற்கிறேன்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் ஆளும்கட்சியை சேர்ந்தவர்களோ, அல்லது எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தண்டனையளிக்க வேண்டும். விதிமுறைகளின்படி திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும். இந்த தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் தர பிரதமர் மோடி விரும்புகிறார்’’ என்றார்.

Related Stories:

>