முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு!: சிங்கள இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்..திருமாவளவன்..!!

சென்னை: இலங்கை யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பிற்கு விசிக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், யாழ் பல்கலைக் கழகத்திலுள்ள  முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை  இடித்துள்ளனர். சிங்கள இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விசிக வன்மையாக க் கண்டிக்கிறது. தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் சிங்கள_ஆதிக்கத்தைத் தகர்ப்போம். தமிழர் அடையாளம் காப்போம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட நினைவுத் தூணை மீண்டும் நிறுவ வேண்டும் என சிங்கள அரசை வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டிருந்தார்.

Related Stories:

>