சூப்பர் லீக் கால்பந்து பெங்களூரு-ஈஸ்ட் பெங்கால் இன்று மோதல்

கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 7வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 51வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- ஐதராபாத் எப்சி அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் ஐதராபாத் ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் 4-2 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் வெற்றி பெற்றது. 10வது ஆட்டத்தில் 4வது வெற்றியை பெற்ற ஐதராபாத் (3 டிரா,3 தோல்வி) 15 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது.

கவுகாத்தி 10வது போட்டியில் 3வது தோல்வியை சந்தித்தது. இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு எப்சி-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு 9 போட்டியில் தலா 3 வெற்றி, 3 தோல்வி, 3 டிரா என 12 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், ஈஸ்ட் பெங்கால் 9 போட்டியில் ஒரு வெற்றி, 4 டிரா, 4 தோல்வி என 7 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளன.

Related Stories: