×

சிங்கம்புணரி அருகே கொட்டும் மழையில் இளவட்ட மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கொட்டும் மழையில் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் காளைகள் முட்டி 10 பேர் காயமடைந்தனர்.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே சூரக்குடியில் ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். நேற்றுகாலை சூரக்குடி கிராமத்தின் நடுவே உள்ள மஞ்சுவிரட்டு தொழுவத்திற்கு பல்வேறு ஊர்களில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டன. முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

காளைகளை இளைஞர்கள் லாவகமாக விரட்டி பிடித்தனர். பிடிக்க முயன்றவர்கள் சகதியில் சிக்கியும், மாடு முட்டியதிலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் போக்கு காட்டி ஓடின. கொட்டும் மழையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.



Tags : Ilavatta Manjuvirattu ,Singampunari , Ilavatta Manchuvirattu in pouring rain near Singampunari
× RELATED சிங்கம்புணரியில் எருதுகட்டு விழா