×

திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டிற்கு தயாராகும் சிராவயல் : கொட்டும் மழையிலும் ஏற்பாடுகள் ஜரூர்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே சிராவயல் மஞ்சுவிரட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. திருப்புத்தூர் அருகே சிராவயலில் தமிழர்களின் பாரம்பரிய மஞ்சுவிரட்டு ஆண்டு தோறும் தை மாதம் மாட்டுப்பொங்கல் மறுநாள் நடைபெறும். இவ்விழாவிற்கான பணிகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர். மஞ்சுவிரட்டு பொட்டலை சுத்தம் செய்து, தொழு, பார்வையாளர்கள் அமரக்கூடிய கேலரியை நேற்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.  

மஞ்சுவிரட்டு நடைபெறும் ஜன.16ம் தேதியன்று காலையில் கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் பங்கேற்கும். இதை காண வெளிநாட்டவர்களும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளுவார்கள். இதனால் திருப்புத்தூர், சிராவயல், தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பல கிராமங்கள் இப்போதே திருவிழா கோலம் பூண்டுள்ளது.


Tags : Srivayal ,Manjuvirattu ,Tiruputhur , Near Tiruputhur Syphilis preparing for manchurian : Arrangements must be made in pouring rain
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி