×

அருவங்காடு சாலையில் 50 காட்டு மாடுகள் உலா : மக்கள் அலறியடித்து ஓட்டம்

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள அருவங்காடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் கூட்டமாக வலம் வந்ததை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, காட்டுமாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவைகள் வனங்களை விட்டு வெளியே வந்து தற்போது மக்கள் வாழும் பகுதிகளையும், விவசாய நிலங்களையும் முற்றுகையிடுகின்றன. இதனால், அடிக்கடி மனித விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. தற்போது ஊட்டி, கோத்தகிரி, குந்தா மற்றும் குன்னூர் ஆகிய பகுதிகளில் இந்த காட்டு மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, குன்னூர் அருகேயுள்ள காட்டேரி டேம், பழத்தோட்டம், பழைய அருவங்காடு பகுதிகளிலும் இந்த காட்டு மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இவைகள் கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்குள் நுழைந்து விடுகின்றன. இதனால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இவைகள் கூட்டம் கூட்டமாக மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் சாலைகளில் வலம் வருவதால், அதனை கண்டு பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் நேற்றும் ஊட்டி அருகேயுள்ள அருவங்காடு பஜார் பகுதியில் காட்டுமாடுகளின் கூட்டம் ஒன்று சாலைக்கு வந்தது. சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு மாடுகளை கண்டு பொதுமக்கள், ஊழியர்கள் சுற்றுலா பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.


Tags : Aruvankadu Road , 50 wild cows on Aruvankadu Road : People screaming and running
× RELATED போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை...