காங்கயம் பி.ஏ.பி. கிளை வாய்க்கால் தூர்வார விவசாயிகள் கோரிக்கை

காங்கயம்:  பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் காங்கயம் வழியாக பி.ஏ.பி கிளை வாய்க்கால் வெள்ளகோவில் வரை செல்கிறது. பி.ஏ.பி. தண்ணீர் 4 மண்டலங்களாக  பிரிக்கப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர்   விடப்படுகிறது. தற்போது 3வது  மண்டலத்திற்கு தண்ணீர் விடப்பட உள்ளது. இந்த கிளை வாய்க்காலில்  தண்ணீர் விடப்படும் முன்பு பொதுப்பணிதுறையின் சார்பில் வாய்க்காலில் புதர்கள் மண்டி கிடந்தால் அவற்றை நீக்கி சுத்தம் செய்வார்கள். இதனால் தண்ணீர் தடைபடாமல் சீராக ஓடும்.

 ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த வாய்க்காலை  தூர்வாராமல் இருந்த காரணத்தினால் காங்கயம் திருப்பூர்  சாலை வாய்க்கால் மேடு அருகே பிரிந்து சிவன்மலை கிராமத்திற்கு செல்லும் கிளை வாய்க்காலிலும் மற்றும் தொட்டியபட்டி பகுதிக்கு பிரிந்து செல்லும் கிளை வாய்க்காலிலும் புதர்கள் அடைத்தும், கான்கிரீட் வாய்க்காலில் ஒரு அடி அளவு மண் நிரம்பியும்  காணப்படுகின்றன. இதனால் வாய்க்காலில் தண்ணீர் ஓட்டம் தடைபட்டு தண்ணீர் செல்லமுடியாத நிலை ஏற்படும்  என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிளை வாய்க்காலை தூர்வார வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>