×

கோவை-ராஜ்கோட் இடையே சரக்கு ரெயில் சேவை

கோவை: வடகோவை ரெயில் நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிற்கு  சரக்கு ரெயில் சேவை தொடங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சீனிவாஸ், முதுநிலை கோட்ட வனிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் கலந்து கொண்டு சரக்கு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.   
ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது, ‘இந்த சரக்கு ரெயில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 5 மணிக்கு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சென்றடையும். இந்த சரக்கு ரெயில் வஞ்சிபாளையம் (திருப்பூர்), ஆங்கூர் (ஈரோடு), உத்னா (சூரத்), பருச் சந்திப்பு (அங்கலேஸ்வர்), கங்காரியா (ஆமதாபாத்) ஆகிய இடங்களில் நின்று செல்லும். இதேபோல் மறுமார்க்கமாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் ராஜ்கோட் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படுட்டு வியாழக்கிழமை இரவு 8.35 மணிக்கு வடகோவை ரெயில் நிலையத்தை வந்தடையும்.

கொரோனா அச்சம் காரணமாக பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சரக்குகளை ரயிலில் ஏற்றி, இறக்குவார்கள். இதுதவிர விரையில் கோவையில் இருந்து டெல்லி பட்டேல் நகருக்கும், திருப்பூர் வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புது கவுகாத்திக்கும் சரக்கு ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். நிகழ்வில் ரயில் பயணிகள் சங்க தலைவர் ஜமீல் அகமத், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் சண்முகம் மற்றும் ஸ்டார் அசோசியேட்ஸ் காளிமுத்து மற்றும் வெங்கட் வேல் உள்பட ரயில்வே அதிகாரிகள் பலர்  கலந்து கொண்டனர்.



Tags : Coimbatore ,Rajkot , Freight train service between Coimbatore and Rajkot
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்