புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடிநெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு நல்ல பருவ மழை பெய்ததாலும், மேட்டூர் அணை 8 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த நேரத்தில் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டாலும, சுமார் 2.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ள பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அறுவடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நெடுவாசல், கருக்காகுறிச்சி, பொன் புதுப்பட்டி, கீரனூர், ஆலங்குடி, இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் இன்னும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காத்தால் விவசாயிகள் விளைந்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நெடுவாசல், கீரனூர், அன்னவாசல், புதுப்பட்டி உள்ளிட்ட அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரையில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் இருப்பது வேதனை ஏற்படுத்துவதாகவும் உடனடியாக தேவையான அனைத்து பகுதிகளிலும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசிய போது:விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு 12 இடங்களில் உடனடியாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தேவையான உள்ளிட்ட இடங்களில் இன்னும் ஓரிரு நாட்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும் கடந்த குறுவை சாகுபடிக்காக 61 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடியை முன்னிட்டு கூடுதலாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

Related Stories:

>