×

குண்டும் குழியுமான சாலை சீரமைப்பு

திருப்போரூர்: குண்டும் குழியுமாக இருந்த பழைய மாமல்லபுரம் சாலை, தினகரன் செய்தியால் உடனடியாக சீரமைக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த அடை மழையின் காரணமாக பழைய மாமல்லபுரம் சாலையில் படூர், ஏகாட்டூர், கழிப்பட்டூர், கேளம்பாக்கம், திருப்போரூர், இள்ளலூர் சந்திப்பு உள்பட பல்வேறு இடங்களில் சாலைகளில் தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. குறிப்பாக திருப்போரூர் ரவுண்டானாவில் இருந்து இள்ளலூர் சந்திப்பு வரை சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழை நீர்தேங்கியதால் சாலையா, பள்ளமா என தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். பைக்கில் சென்றவர்கள், விபத்தை சந்தித்தனா் என நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நேற்று அப்பகுதியை ஆய்வு செய்து, உடனடியாக பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் சாலை பணியாளர்களுடன் சேதமடைந்த பழைய மாமல்லபுரம் சாலையை சீரமைத்தனர். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன், தினகரன் நாளிதழுக்கு நன்றியை தெரிவித்தனர்.


Tags : Bumpy pothole road alignment
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...