புதிய மாவட்ட தலைவர் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி

ஸ்ரீபெரும்புதூர்:  காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அளவூர் நாகராஜன், ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் கட்சியின்  காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக அளவூர்  நாகராஜனை அக்கட்சி நியமித்துள்ளது. இதையொட்டி, புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அளவூர் நாகராஜன், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ராஜிவ்காந்தி நினைவிடத்துக்கு,  கட்சி நிர்வாகிகளுடன் சென்று மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Related Stories:

>