பாமகவினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ம.க., சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடுகோரி, ஐந்தாம் கட்ட போராட்டம் நேற்றுமுன்தினம் திருவள்ளூரில் நடந்தது. மாநில துணைப் பொதுச் செயலாலர் பாலயோகி தலைமை வகித்தார். வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடுகோரி பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோரின் ஆலோசனைப்படி அறவழிப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் ஐந்தாம் கட்ட போராட்டம் திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர்  வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடுகோரி கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக நகராட்சி அலுவலகத்துக்குள் சென்று, நகராட்சி ஆணையர் சந்தானத்திடம் மனு அளித்தனர்.

Related Stories:

>