ஐதராபாத் எப்சி அசத்தல் வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில், ஐதராபாத் எப்சி அணி 4-2 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி அணியை வீழ்த்தியது. அந்த அணியின் அரிடேன் 3வது நிமிடத்திலும், சியானீஸ் 36வது நிமிடத்திலும் கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தனர். இதைத் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்திய நார்த்ஈஸ்ட் யுனைட்டட் அணிக்கு 45வது நிமிடத்தில் கல்லெகோ (பெனால்டி), லாம்பாட் அடுத்தடுத்து கோல் போட்டு அசத்த 2-2 என சமநிலை ஏற்பட்டது. இரண்டாவது பாதியின் கடைசி கட்டம் வரை இழுபறி நீடித்த நிலையில், ஐதராபாத் அணியின் லிஸ்டன் கோலகோ 85வது மற்றும் 90வது நிமிடங்களில் கோல் அடித்து வெற்றிக்கு உதவினார். இப்போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி.

Related Stories:

>