×

காலாவதியான பாலிசியை புதுப்பிக்க எல்ஐசி அவகாசம்

சென்னை:  கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, காலாவதியான பாலிசிக்களை புதுப்பிப்பதற்கு எல்ஐசி நிறுவனம் அவகாசம் வழங்கியுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் கடந்த 7.1.2021 அன்று தொடங்கியது. 6.3.2021 வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசிக்களை புதுப்பித்துக் கொள்ளலாம். மருத்துவ பரிசோதனைக்கு அவசியம் இல்லாத பாலிசிக்களை புதுப்பிப்பதற்கு 1,526 சாட்டிலையட் அலுவலகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இந்த சிறப்பு புதுப்பிப்பு முகாமில், தகுதியுடைய காப்பீடு திட்ட பாலிசிக்களை, பிரீமியம் கட்டத் தவறியதில் இருந்து 5 ஆண்டுக்குள், விதிகளுக்கு உட்பட்டு புதுப்பித்துக் கொள்ளலாம். இதுபோல், தகுதியை கருத்தில் கொண்டு உடல் நலம் தொடர்பாகவும் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான பாலிசிக்கள், நல்ல உடல் நலத்துடன் உள்ளதற்கான சுய உறுதிச்சான்று மற்றும் கொரோனா தொடர்பான கேள்விகள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

பிரீமியத்துக்கு ஏற்ப தாமத கட்டண அபராத தொகையில் சலுகைகள் உண்டு.இதன்படி 1 லட்சம் வரையிலான பிரீமியத்துக்கு தாமத கட்டணத்தில் 20 சதவீதம் அல்லது அதிகபட்சம் 2,000,1 லட்சத்து 1 முதல் 3 லட்சம் வரையிலான பிரீமியத்துக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சம் 2,500, 3 லட்சத்து 1 மற்றும் அதற்கு மேற்பட்ட பிரீமியத்துக்கு 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் 3,000 சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : LIC , LIC opportunity to renew expired policy
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...