×

மும்பை தாக்குதலின் மூளை லஷ்கர் தலைவனுக்கு 15 ஆண்டுகள் சிறை

லாகூர்: தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த வழக்கில், லஷ்கர் இ தொய்பாவின் தலைவன் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. ஐநா.வால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 61 வயதான லக்வி, 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன். 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக, லக்வியை ஒப்படைக்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டிருந்தது. அதற்கான ஆதாரங்களை வழங்கிய பின்பும் பாகிஸ்தான் அவனை கைது செய்யாமலும், இந்தியாவிடம் ஒப்படைக்காமலும் இருந்தது. சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் அவனை கைது செய்தது. எனினும், 2015ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தான்.

இதற்கிடையே, பாகிஸ்தான் மீது தொடர் புகார்கள் வந்ததால் சமீபத்தில் நேட்டோ அல்லாத நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை அமெரிக்கா நீக்கியது. இந்நிலையில், அவனை தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளித்த குற்றச்சாட்டில் பஞ்சாப் மாகாண தீவிரவாத தடுப்பு போலீசார் கைது செய்தனர். லாகூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் நேற்று அவனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் மதிப்பில் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.



Tags : Lashkar-e-Taiba leader jailed for 15 years
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...