ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினருக்கு அபராதம்

சென்னை: நீட் தேர்வால் கடந்த 2017ம் ஆண்டு மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் இறப்புக்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆவடியில் கடந்த 2017ம் ஆண்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டது எனவே, இதையடுத்து 39 பேர் மீது ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, பூந்தமல்லிகுற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மயில்சாமி 39 பேருக்கும் தலா 500 அபராதமும். அபராதம் கட்டத்தவறினால் 7 நாள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து 39 பேரும் தலா 500 வீதம் 19,500 அபராதத் தொகையைக் கட்டி உள்ளனர்.

Related Stories:

>