திருப்போரூரில் 12ம் தேதி முதல்வர் எடப்பாடி பிரசாரம்

சென்னை: வரும் 12ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்போரூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் அடங்கிய திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் வரும் 12ம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார். திருப்போரூர் தொகுதியில் அடங்கிய நாவலூர், கேளம்பாக்கம், திருப்போரூர், பூஞ்சேரி சந்திப்பு, புதுப்பட்டினம் ஆகிய இடங்களில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் கலந்துகொள்ளும் அவர், திருப்போரூர் மற்றும் புதுப்பட்டினம் ஆகிய இடங்களில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

Related Stories:

>