கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 1,048 குறைந்தது

சென்னை: தங்கம் விலை கடந்த 2 நாட்களில் சவரன் 1,048 குறைந்தது. தங்கம் விலை கடந்த 3 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 30ம் தேதி முதல் தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் சவரன் 1,384 அதிகரித்தது. இது நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை கிராமுக்கு 80 குறைந்து ஒரு கிராம் 4,805க்கும், சவரனுக்கு 640 குறைந்து ஒரு சவரன் 38,440க்கும் விற்கப்பட்டது. 2வது நாளாக நேற்றும் தங்கம் விலை குறைந்தது. காலையில் கிராமுக்கு 13 குறைந்து ஒரு கிராம் 4,792க்கும், சவரனுக்கு 104 குறைந்து ஒரு சவரன் 38,336க்கும் விற்கப்பட்டது. மாலையில் மேலும் தங்கம் விலை குறைந்தது. மாலையில் நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 51 குறைந்து ஒரு கிராம் 4,754க்கும், சவரனுக்கு 408 குறைந்து, சவரன் 38,032க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் சவரன் 1048 அளவுக்கு குறைந்துள்ளது. நகை விலை குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>