வைகோ வலியுறுத்தல் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தப்பவிடக் கூடாது

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் குற்றவாளிகள் அனைவரையும் கூண்டில் ஏற்ற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என ஏராளமானவர்களை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் கூட்டுப் பாலியல் வன்முறையில் சில கயவர்கள் ஈடுபட்டனர். பெண்களை தெய்வமாக வணங்கிப் போற்றும் தமிழ்நாட்டில், பொள்ளாச்சியில் நடந்த கூட்டுப் பாலியல் கொடுமை தமிழக வரலாறு இதுவரை காணாத கொடிய நிகழ்வு. டெல்லியில் ஒரு ‘நிர்பயா’வுக்கு நடந்த கொடுமை ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கியது. தமிழகத்திற்கு அவமானத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு காரணமான அனைவரையும், சட்டத்தின் சந்துபொந்துகளில் தப்பிவிடாமல், கைது செய்து, தண்டிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>