திமுகவில் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி

சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி அமைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திமுக சட்டதிட்ட விதிகளின் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை திமுக உறுப்பினராக இணைப்பதற்கும் - ஒவ்வொரு நாட்டிலும், திமுக அமைப்புகளை உருவாக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி என்ற புதிய அணி அமைக்கப்படுகிறது. அணிச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ, இணைச் செயலாளர் களாக டாக்டர் செந்தில்குமார், எம்பி, புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>