×

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பதவிக்கான மெயின் தேர்வு துவங்கியது: சென்னையில் மட்டும் தேர்வு மையம்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடந்தது. தேர்வர்கள் கடும் சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்துகிறது. 2020ம் ஆண்டில் சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 796 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த அக்டோபர் 4ம் தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 6 லட்சம் பேர் எழுதினர்.  அக்டோபர் 23ம் தேதி முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் 10,564 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 750 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை முதல் தாள் தேர்வு நடந்தது.

மெயின் தேர்வு இந்தியா முழுவதும் 24 நகரங்களில் நடந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை சூளையில் உள்ள சென்னை ெபண்கள் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த தேர்வு நடந்தது. தேர்வர்களை போலீசார் மூலம் கடும் சோதனை செய்தனர். மேலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  இது குறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது:சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடைபெறுகிறது. 2ம் நாளான இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இரண்டாம் தாள் (பொது அறிவு 1), மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள் (பொது அறிவு 2) தேர்வும் நடக்கிறது. 10ம் தேதி காலையில் 4ம் தாள்(பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு(பொது அறிவு4) நடக்கிறது. அதன் பிறகு வருகிற 16ம் தேதி காலையில் இந்திய ெமாழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வும் நடக்கிறது. கடைசி நாளான 17ம் தேதி காலையில் விருப்பப்பாடம் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.



Tags : examination ,IAS ,examination center ,IPS ,Chennai , Main examination for IAS, IPS post started: Chennai only examination center
× RELATED நீட் அடிப்படை பயிற்சி தேர்வு...