×

மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் குறித்து அறிய ஸ்டாலின் அணி செயலி உருவாக்கம்

சென்னை: திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் மற்றும் திமுகவின் சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்தையும் உடனுக்குடன் ‘ஸ்டாலின் அணி’ செயலியின் மூலம் பெற்றிடலாம். இச்செயலியின் மூலம் திமுகவின் முன்னெடுப்புகளில் பங்களித்து, எதிர் வரும் 2021 சட்டமன்றத் தேர்தல் பணிகளில் உங்களது பங்களிப்பை வெளிப்படுத்தலாம். தமிழ்க் கலாசாரத்தையும், தமிழர் உரிமைகளையும் மீட்டெடுக்க; புது விடியலை நோக்கிய திமுகவின் பயணத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் திமுகவின் ஒவ்வொரு உறுப்பினரும், ஆதரவாளரும், தொண்டரும் நேரடியாகத் தொடர்பில் இருக்க இச்செயலி வழிவகை செய்கிறது. எனவே, கீழுள்ள க்யூ ஆர் கோடை-ஐ பயன்படுத்தியோ அல்லது நேரடியாக கூகுள் ப்ளே ஸ்டோர்/ ஆப்பிள் பிளே ஸ்டோர் தளங்களிலோ ‘ STALIN ANI ‘ செயலியைப் பதிவிறக்கிக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : MK Stalin , Development of Stalin's team processor to learn about MK Stalin's activities
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...